ஆர்.எஸ் புரம் கோவையில் முக்கிய வணிகயிடம். இதன் விரிவாக்கம் இரத்தின சாபாபதி புரம். சாலையோரத்தில் வாகனம் நிறுத்துமிடம் கிடைப்பதறிது. திவான் பகதூர் சாலை முழுவதும் வியாபாரம்மையங்களும் சிறு கடைகளும் தள்ளுவண்டிகளும் சூழ்ந்திறுக்கும். அந்தச் சாலையில் துனிக்கடைகள், கோயில், இராசத்தான் சமாஜ், விஐபி பைய்கள்,அகர்வால் இனிப்புக்கடை, பாஸ்ட் டிரேக்கு கடிகாரக் கடை, தள்ளு வண்டியில் சீனிப்புளியங்காய், நடைப்பாதையில் மணம் வீசம் பூக்களுமாய் இருக்கும்.
அந்தத் தெருவில் அகர்வால் இனிப்புக்கடையில் எப்போதும் பொதுவெளியில் வைத்த இனிப்பின் மேல் ஈ மொய்ப்பது போல மக்கள் திரள்நின்றுக்கொண்டிருக்கம். பள்ளி நாட்களில் இளசுகளுக்கு இது தான் சந்திக்குமிடம். விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பானி பூரி, இரசகுல்லா, ஜீலேப்பி அதிகம் விற்கும்.
அஃது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. வெப்பம் தனிந்து மக்கள் கூட்டமாய் நடமாடிக்கொண்டு இருந்தனர். பெரும்பாலும் குடும்பத்தினர். தெரு வளக்குகள் ஒவ்வொன்றாய் எரிய ஆரம்பித்தன.
ஒரு குடும்பத்தினர் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காகச் செட்டியார் கடையிருக்கும் தெருவில் மகிழுந்தை நிறுத்தனார்கள். கடைக்குச் செல்ல அம்மா,அப்பா, அண்ணன், தங்கை மகிழுந்திலிருந்து இறங்கி நடைபாதையில் நடக்க ஆரம்பித்தனர். அந்தப் பெரும் மளிகைக்கடை வீதியின் மறுமுனையில் உள்ளது. சுமார் பத்துக்கடைகள் தாண்டி தான் செல்ல வேண்டும். அன்னன்க்குப் பொருட்கள் வாங்கும் வரை நிற்க ஆரவமில்லை. ஆதலால் அன்று வாங்கிய விகடனின் தடம் மாத இதழை கையில் எடுத்துக்கொண்டான். இவனக்குக் கொஞ்சம் வேடிக்கைப் பார்ப்பதில் அளாதி ஆர்வம்.
இவன் பிறந்து வளர்ந்து கோவையில், இப்போது நாண்காண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறன். மாதம் ஒரு முறை சொந்த ஊர்க்கு வருவான். இந்த முறை வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக மளிகைப் பொருட்கள் வாங்க வந்தார்கள். சிறது நேரம் நடந்த பின் அகர்வால் இனிப்புக் கடை முன் வந்து சேர்ந்தார்கள். விடுமுறை நாள் என்பதால் நெரிசல் அதிகமாகிருந்தது. சில வினாடிகள் நின்று ஒவ்வொருவராக இனிப்புக் கடையைக் கடந்து சென்றார்கள்.
இவன் கடைசியாக நின்றுயிருந்த இனிப்புக்கடை முன் ஒரு கிழவி எவர் சில்வர் தட்டில் காகிதம் விரித்து வடை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தான். இரு கால்களை நடைபாதையில் தொங்கவிட்டு ஒரு முனையில் அமர்ந்திருந்தாள். கை, கழுத்தில் அணிகலன் எதுவுமில்லை. ஒருவினாடி வாங்கலாமா என்று நின்று யோசித்தான். அப்போது பின்னால் வந்த ஒருவர் ‘தம்பி தள்ளுங்க’ என்று சொன்னதும் நகரத் தொடங்கினான். அந்தக்கடையைக் கடந்த பின் ஒரு முறை அந்தக் கிழவியைத் திரும்பிப் பார்த்து, அங்கு நின்றிருந்த குழந்தையை நோக்கி புன்னகத்தான்.
மீண்டும் சிறது தூரம் நடந்த பின் கடைக்குள் எல்லாரும் ஒன்றாக நடந்தனர். அவன் கையிலிருந்த மாத இதழைக் காட்டி இதை உள்ளே எடுத்த செல்ல முடியாது என்றொரு பனியாள் மறுத்தார். ஏன் என்று கேட்டப்போது ‘சார் இந்தப் புக்கு எங்க கடையிலுமிருக்கு. நீங்க அந்தப் பெட்டியில் வச்சுட்டு உள்ள போய்ட்டு வரும்போது எடுத்துங்ஙோ’. இவன் அம்மாவிடம் ‘நீங்க போய் வாங்கிட்டு வாங்க, நான் இங்க உக்காந்திட்டுயிருக்கேன்’. அவர்கள் உள்ளே சென்ற பின் அங்குப்போடப்பட்டிருந்த மூவர் அமரக் கூடிய இரும்பு நாற்காலியில் அமர்ந்து ஒரு முறை கடையை மேலும் கீழும் பார்த்தான்.
இதழை விரித்துச் சல்லிகட்டுப் பற்றியுள்ள ஒரு கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தான். அந்தக் கட்டுரை எட்டுப் பக்கங்களுக்கு நீண்டது. அவன் இரண்டாவது பக்கம் வாசிக்கும் போது அந்த வடை அவனைக் குடையத்தொடங்கியது. அந்தப் பக்கத்தைப் படித்த பின் கடை வாசில் வந்து நின்றான். வாசிலின் இருபுறமும் மக்கள் மக்காச்சோளமும், கடலைக்காயும் அமர்ந்து திண்றுக்கொண்டிருந்தார்கள். வாசிலின் இடது புறமாக இனிப்புக் கடை இருந்தது.
நடைப்பாதையில் கணவன் மனைவியும் சீனிப்புளியங்காயை தரையில் விரித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் ஒரு தெருவிளக்கு எரிந்தது. தெருவிளக்குப் பின்னால் இனிப்புக் கடைக்கு எதிராக வடை விற்கும் கிழவி அங்கு நின்றிருப்பவர்களையும் கடந்து செல்பவர்களையும் ஏக்கத்துடன் நிமிர்ந்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வாசலுக்கு வலதுப்புறமாக நின்று கொண்டு மளிகைக் கடைக்கு வருபவர்களையும், இனிப்புக்கடைக்கு வருபவர்களையும், சாலையைக் கடப்பவர்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டியிருந்தான். அந்தக் கிழவியிடம் யாராவது வந்து வடை வாங்குவார்களா என்று பார்த்தான், யாரும் வருவதுபோலத் தென்படவில்லை. தெருவில் நடப்பவர்கள் எல்லாம் இனிப்புக் கடையைப் பார்க்கிறார்களே ஒழிய இவளைப் பார்த்த பாடில்லை. ஒவ்வொரு முறையும் ஆட்கள் தன்னைக் கடக்கும் போது கிழிவி தலையை உயர்த்திப் பார்ப்பாள், இவளை யாரும் கண்ட பாடில்லை.
இதை எல்லாம் இவன் பார்த்தப் பின், அவன் மொதுவாக நடந்து சென்று, ‘பாட்டி, வடை ஒன்னு எவ்வளவு பாட்டி’ என்றான். அவள் ‘தம்பி ஒன்னு அஞ்சு ரூவா’. ‘அப்போ ஒரு அஞ்சுக் குடுங்கே பாட்டி’ என்றான். மூடியிருந்த காகித்தை நகர்த்தி, ஐந்து வடைகளை அவள் தட்டியிருந்து எடுத்துக் காகித்தில் சுற்றி ‘இந்தாகண்ணு’ என்று கொடுத்தாள். பொட்டலத்தை வாங்கிக்கொண்டு, முப்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அவன் ஐந்து ரூபாய் பாக்கியாய்வாங்கிக்கொண்டு, இதற்கு முன்னால் நின்றிருந்த இடத்தில் மறுபடியும் போய் நின்றான்.
சுற்றி முற்றி என்ன நடக்கிறது, யார் வருகிறார்கள் என்று பார்த்தப்படியாய் நின்றான். அவ்வப்போது யாரேனும் கிழிவியிடம் வடை வாங்கினார்களா என்று பார்த்தான். யாரும் அவளைக் கண்டு கொள்ளவில்லை. சிறது நேரத்தில் அவனது தங்கை வந்து ‘இங்க என்னடா பன்றே’. ‘சும்மா உள்ள உக்காரதுக்கு வெளியேநிக்கறேன்’ என்றான். அது ‘என்னடா கையிலே’ என்றாள். அதுவா ‘வடை வாங்கனே’ என்றான். ஒ, ‘அந்தப் பாட்டிக்கிட்ட வாங்கினியா’ என்றாள். ஆம் என்றான். இவளும் அந்தக் கிழிவியைப் பார்த்திருக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு மகிழுந்தை நோக்கி நடைப் போட ஆரம்பித்தான்.
மகிழுந்தின் பின் இருக்கையில் அம்மாவுடன் ஏறி அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து வடை எடுத்து ஒரு கடி கடித்தான். கடித்தப்பின் இவனுக்குச் சந்தேகமாக மனதிற்குள் ‘என்ன பருப்பு வடையைப் போல இல்லை’ என்று நினைத்துக் கொண்டான். அம்மா அவனை நோக்கி, ‘எப்படா நீ எலந்த வடைச்சாப்பிட ஆரம்பிச்சே’. அப்போது தான் அவனுக்கு எலந்த வடை என்று ஒன்று இருப்பதாகத் தெரியவந்தது. எலந்த வடைக்கும் பருப்பு வடைக்கும் மாறுபாடுத் தெரியாதையை எண்ணி வருத்தினான்.